search icon
என் மலர்tooltip icon

    கார்

    அடுத்த மாதம் அறிமுகமாகும் புதிய பிஎம்டபிள்யூ M2
    X

    அடுத்த மாதம் அறிமுகமாகும் புதிய பிஎம்டபிள்யூ M2

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய M2 மாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த காரில் பெரும்பாலும் ரியர் வீல் செட்டப் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் அடுத்த தலைமுறை M2 மாடலை அக்டோபர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. G87 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் சிறய M கார் இரண்டவாது தலைமுறை மாடல் ஆகும். புதிய M2 மாடலில் S58 என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 450 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அறிமுகமாகும் CS/CSL மற்றும் காம்படிஷன் வெர்ஷன்கள் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் பெரும்பாலும் ரியர் வீல் செட்டப் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் எக்ஸ்-டிரைவ் AWD வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம்.


    தோற்றத்தில் புதிய M2 அதன் வழக்கமான மாடலை போன்றே காட்சியளிக்கும். 2 சீரிஸ் கூப் மாடலை தழுவி உருவாகி இருக்கும் நிலையில், பெரிய ஏர் இண்டேக், குவாட் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பெரிய அலாய் வீல்கள், க்ரிப் டயர்கள், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் கோ-ஃபாஸ்ட் வெர்ஷனில் லிப் ஸ்பாயிலர் வழங்கப்பட இருக்கிறது.

    உள்புறம் ஐடிரைவ் 8 வழங்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் திறன் இல்லாத கடைசி M கார் மாடல் ஆகும். புதிய தலைமுறை M2 மாடலை தழுவி பாரம்பரிய பிஎம்டபிள்யூ 3.0 CSL மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    Next Story
    ×