search icon
என் மலர்tooltip icon

    கார்

    பத்து நிறங்கள், இருவித வேரியண்ட்களில் அறிமுகமானது சிட்ரோயன் C3
    X

    பத்து நிறங்கள், இருவித வேரியண்ட்களில் அறிமுகமானது சிட்ரோயன் C3

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஹேச்பேக் மாடல் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
    • இதில் டூயல் ஸ்லாட் குரோம் கிரில் உள்ளது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட C3 ஹேச்பேக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 விலை இந்தியாவில் ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பத்து வித நிறங்கள், இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    வெளிப்புறத்தில் புதிய சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், சிக்னேச்சர் டூயல் ஸ்லாட் குரோம் கிரில், ஃபாக் லைட்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், வீல் கவர்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள் உள்ளன. இத்துடன் பம்பரில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது.


    காரின் உள்புறம் 2022 சிட்ரோயன் C3 மாடல் 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் சீட், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, நான்கு ஸ்பீக்கர்கள், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், டில்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்டீரிங் வழங்கப்பட்டு உள்ளது.

    என்ஜினை பொருத்தவரை சிட்ரோயன் C3 மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 109 ஹெச்.பி. பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 81 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 லைவ்: ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் ரூ. 6 லட்சத்து 62 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் வைப் பேக் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் டூயல் டோன் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம்

    சிட்ரோயன் C3 ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 6 லட்சத்து 93 ஆயிரம்

    சிட்ரோயன் C3 டர்போ ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 06 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 கார் கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×