search icon
என் மலர்tooltip icon

    கார்

    புதிய காம்பேக்ட் எஸ்யுவி டெஸ்டிங்கை துவங்கிய மாருதி சுசுகி
    X

    புதிய காம்பேக்ட் எஸ்யுவி டெஸ்டிங்கை துவங்கிய மாருதி சுசுகி

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ காரை தழுவி புது காம்பேக்ட் எஸ்யுவி மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த கார் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் மாருதி பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் YTB எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருக்கிறது. இந்த கார் பிரெஸ்ஸா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    புதிய மாருதி YTB மாடல் பியுச்சுரோ இ கான்செப்ட் மாடலை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யுவி கூப் எஸ்யுவி ஆகும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மாருதி YTB அறிமுகம் அல்லது காட்சிப்படுத்தப்படலாம்.


    மாருதி சுசுகி ஆலை அமைந்து இருக்கும் குருகிராம் பகுதியில் தான் புது காரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த காரின் பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள், ஷார்க் பின் ஆண்டெனா, ரூப் ரெயில்கள், ரியர் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களில் பின்புற வைப்பரில் வாஷர் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    காரின் முன்புறம் எப்படி இருக்கும் என தெளிவாக தெரியவில்லை. எனினும், இந்த மாடலில் எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப் மீது பம்ப்பரில் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

    Next Story
    ×