search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    சிட்ரோயன் C3 இந்திய வெளியீட்டு விவரம்
    X

    சிட்ரோயன் C3 இந்திய வெளியீட்டு விவரம்

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய கார் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இது சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மேட் இன் இந்தியா மாடல் ஆகும்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது முதல் மேட் இன் இந்தியா வாகனம், சிட்ரோயன் C3 காரை இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே தகவலை டீலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் டீலர் தரப்பில் புதிய சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவும் துவங்கி உள்ளது. சிட்ரோயன் C3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபிளாக்‌ஷிப் C5 ஏர்கிராஸ் மாடலை அறிமுகப்படுத்தி சிட்ரோயன் நிறுவனம் களமிறங்கியது. புதிய C3 மாடல் மூலம் பிரெஞ்சு பிராண்டு சந்தையில் தனது இடத்தை நிலைநிறுத்த முடிவு செய்து உள்ளது. அசத்தலான டிசைன், காண்டிராஸ்ட் ட்ரிம் எலிமண்ட்களை கொண்ட சிட்ரோயன் C3 மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த கார் டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்காது என்றே கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.

    Next Story
    ×