search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஜூலை 20-இல் இந்தியா வரும் சிட்ரோயன் C3 - முன்பதிவு எப்போ துவங்குது தெரியுமா?
    X

    ஜூலை 20-இல் இந்தியா வரும் சிட்ரோயன் C3 - முன்பதிவு எப்போ துவங்குது தெரியுமா?

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 மாடல் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
    • இந்த மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 மாடல் இந்திய சந்தையில் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த மாடல் இருவதி பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், டூயல் குரோம் ஸ்லாட் முன்புற கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், பிளாஸ்டிக் கிளாடிங் மற்றும் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் உள்ளன. புதிய சிட்ரோயன் C3 மாடல் நான்கு மோனோ டோன் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    இதன் மோனோ டோன் வேரியண்ட்கள் போலார் வைட், ஸ்டீல் கிரே, செஸ்டி ஆர்ஞ்சு மற்றும் பிளாட்டினம் கிரே நிறங்களிலும், டூயல் டோன் வேரியண்ட்கள் செஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே ரூஃப் மற்றும் போலார் வைட், செஸ்டி ஆரஞ்சு நிற ரூஃப் நிறங்களில் கிடைக்கிறது.


    புதிய சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடலில் 1.2 லிட்டடர் பெட்ரோல் மற்றும் 1டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் டீசல் என்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்காது என்றே கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதன் பேஸ் மாடல்கள் டாடா நெக்சான், விட்டாரா பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட் மற்றும் கைகர் போன்ற மாடல்களை எதிர்கொள்ளலாம்.

    Next Story
    ×