search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அடுத்த மாதம் இந்தியா வரும் வென்யூ N லைன் - இணையத்தில் லீக் ஆன தகவல்
    X

    அடுத்த மாதம் இந்தியா வரும் வென்யூ N லைன் - இணையத்தில் லீக் ஆன தகவல்

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் N லைன் மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனத்தை திருப்பி இருக்கிறது.
    • இந்த காரில் டர்போ பெட்ரோல் என்ஜின், டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் N லைன் மாடல்கள் எண்ணிக்கையை இந்திய சந்தையில் அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி-யின் N லைன் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்றும் இது செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் i20 N லைன் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. i20 N லைன் மாடலில் இந்த என்ஜினுடன் iMT மற்றும் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வென்யூ N லைன் மாடலில் DCT யூனிட் மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    இந்த காரில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட அலாய் வீல்கள், ரிவைஸ்டு பம்ப்பர்கள், ரெட் இன்சர்ட்கள், டூயல் டிப் எக்சாஸ்ட், புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இவை வென்யூ N லைன் மாடலை அதன் வெண்ணிலா வெர்ஷனை விட வித்தியாசமாக காட்சிப்படுத்த செய்யும். உள்புறம் ஆல் பிளாக் இண்டீரியர், காண்டிராஸ்ட் நிறமான ரெட் ஸ்டிட்சிங், பேடில் ஷிப்டர்கள், N லைன் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், லெதர் கவர் மற்றும் கியர் லீவர் மீது N லைன் மோடிப் வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கும். இந்த கார் டாப் எண்ட் SX(O) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஹூண்டாய் i20 N லைன் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×