search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நானே இடித்திருப்பேன்.. தனது கான்வென்சன் சென்டர்   இடிக்கப்பட்டதால் டென்ஷனான நாகர்ஜூனா
    X

    நானே இடித்திருப்பேன்.. தனது கான்வென்சன் சென்டர் இடிக்கப்பட்டதால் டென்ஷனான நாகர்ஜூனா

    • அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை.
    • இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்

    ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் பிரபலங்களின் இல்லத் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் தற்போது இடித்துள்ளனர். 10 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பதற்கு கண்டம் தெரிவித்து நாகார்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது கருத்தரங்கு கட்டடத்தை தீர்ப்பு வரும் வரை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக தற்போது இடித்துள்ளார்கள். இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு இன்ச் கூட ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை.

    தவறான தகவலால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை. நான் சட்டத்தை மதிப்பவன். நீதிமன்றத்தில் என் மீது தவறெனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே அந்த கட்டடத்தை இடித்திருப்பேன். தற்போது அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×