என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இளைஞர்களுக்கு கல்வி அறிவே நல்ல வாழ்க்கை தரும் - நடிகர் சத்யராஜ் பேச்சு
Byமாலை மலர்7 Jan 2019 11:35 AM IST (Updated: 7 Jan 2019 11:35 AM IST)
பல்வேறுபட்ட தவறான சிந்தனைகளால் இளைஞர்கள் கல்வியை பெரிதாக பொருட்படுத்தாமல் இருக்கும் நிலையில், கல்வி தான் சிறந்தது என்று பள்ளி விழாவில் பேசிய சத்யராஜ் பேசினார். #Sathyaraj
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-
இன்றைய அவசர உலகில் இளைஞர்கள் எல்லோரும் பல்வேறுபட்ட தவறான சிந்தனைகளால் கல்வியை பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் கல்வி அறிவே எல்லா வகையிலும் நல்ல வாழ்க்கையை தரும்.
சாதாரண மக்கள் கூட கல்வி அறிவு இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். அதே போல பட்டறிவும் சிறந்ததுதான் என்று காமராஜர், தந்தை பெரியார் போன்றோர் சொல்லி இருக்கின்றனர்.
அனுபவ அறிவு என்பது வயதாகி முதிர்ச்சி அடைந்த பிறகு வந்தது என்றால், ஒருவேளை அதில் பயன் இருக்கலாம். ஆனால் பள்ளியில் படிக்கும் வயதில் கவனித்து கற்றுக்கொண்டால்தான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற பயிற்சி கிடைக்கும்.
பள்ளியில் படிக்கும் வயதில் அப்படி மனதை ஒருமுகப்படுத்தி பழகிவிட்டால், பின்னர் வரும் வாழ்நாள் முழுவதும் நல்ல நிலையில் நமது மனதைச் செம்மையாக வைத்திருக்க முடியும். இல்லையென்றால், நாம் எந்த வேலைக்குச் சென்றாலும் கவனம் தப்பினால் மரணம் என்பதே நம் வாழ்க்கைநிலை ஆகிவிடும். குதிரை ஏற்றப்பயிற்சி என்பது பழகிவிட்டால் மிகச் சுலபமான விஷயம் தான்.
ஆனால் குதிரை ஏற்றத்தைப் பழகாத ஒருவர் குதிரைமீது ஏறினால், அவர் கீழே விழுந்து விடுவார். ஒரு மாணவருக்கு படிப்பில் திறமை உள்ளதென்றால் அவர் படிப்பில் சிறந்து விளங்கட்டும். அதே சமயம் விளையாட்டில் உரிய பயிற்சிகளைக் கொடுத்தால் மற்றொரு மாணவர் விளையாட்டில் கற்று முன்னேறுகிறார்.
இதுபோன்ற வாய்ப்புகள் எல்லாம் நாங்கள் படிக்கும் போது கிடைக்கவில்லை. பள்ளியில் படிக்கும் வயதில் சரியாக படிக்காததால் பிற்காலத்தில் நான் பலமுறை அதை நினைத்து வருந்தினேன்.
ஒருவர் நடிகராக வேண்டும் என்றால் கூட அதற்கென்று கல்வி நிலையங்கள் உள்ளன. அதில் படித்து முறைப்படி கற்று வருபவர்கள் எங்களை விட நன்றாக நடிக்கின்றனர். அது பற்றிய அறிவு இல்லாததால் வெறும் அனுபவத்தை கொண்டே நாங்கள் நடித்து வருகிறோம்.
மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சியும், முயற்சியும் இல்லாவிட்டால் வருகின்ற தோல்விகள் காலத்தையும் நேரத்தையும் விரயமாக்கிவிடும். அதற்குப் பிறகு முயற்சி என்பது பலன் அளிக்காது போய்விடும். அந்தந்த வயதில் படித்து முடித்து அந்தந்த வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும்.
எல்லாவகையான பயிற்சிகளையும் கற்றுத்தருவது உங்களுக்கெல்லாம் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். அதில் உங்களுக்கென்று எந்த திறமை இருக்கிறதென்று உரிய முறையில் தேர்வுகள் வைத்து கண்டறிந்து இங்கே கற்றுத் தரப்படுவது குறித்து அறிந்தேன். மிக்க மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு பயிற்சிமுறை இதுதான். மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Sathyaraj
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X