search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர், நடிகை ஒருவரின் தொந்தரவை தாங்கமுடியாமல் தவித்து வருகிறார்.
    தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நீண்ட வருடமாக படங்களில் நடிக்காமல் இருந்தாராம். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து ஒரு சில படங்களில் நடித்தாராம். அந்த படங்கள் எதுவும் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். இதனால், பிற மொழியில் வெற்றி பெற்ற ஒரு படத்தை வாங்கி ரீமேக் செய்ய முடிவு எடுத்து அதில் நடித்து வருகிறாராம்.

    இதற்காக தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை அழைத்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறாராம். படப்பிடிப்பில் நடிகையின் தொந்தரவு தாங்க முடியவில்லையாம். தனக்கு அந்த காட்சி வையுங்கள். வேறமாதிரி காட்சி வையுங்கள் என்று நடிகரை ரொம்ப தொந்தரவு செய்கிறாராம் நடிகை.
    சினிமாவை விட்டு பல வருடங்கள் விலகி இருந்த நடிகை மீண்டும் கதாநாயகி வேடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
    தமிழ் சினிமாவில் போ என்று சொல்லி பிரபலமான நடிகை, குறுகிய காலத்திலேயே பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானாராம். அதன்பின் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானதால், தான் பெரிய நடிகையாகிவிட்டோம் என்று தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாராம்.

    இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். நடிகையும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகினாராம். தற்போது மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்து வருகிறாராம். ஆனால், பட வாய்ப்பு கேட்பவர்களிடம் கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று கேட்கிறாராம். நடிகையின் பேச்சை கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும் நடிகைக்கு வாய்ப்புகள் எங்கு கிடைக்கபோகுது என்று பேசிக்கொள்கிறார்களாம்.
    பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
    தமிழில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர், தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். அதே சமயம், வயது அதிகமாகி வருவதால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நடிகையை திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்களாம்.

    ஆனால், நடிகையோ திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகிறாராம். நடிகை நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதாம். அந்த படங்கள் வெளிவந்த பிறகும், ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்த பிறகு தான் கல்யாணம் என்று நெருங்கியவர்களிடம் சொல்லுகிறாராம்.
    நடிகை தேர்வில் முன்னணி நடிகர் ஒருவர் சில நிபந்தனைகளை விதித்ததால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த சீனியர் நடிகர் ஒருவர், வயதானாலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்கிறாராம். இதனால் அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் அவருக்கு ஹீரோயினை தேடுவதில் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்களாம். ஏனெனில், அந்த நடிகரின் பெயரைக் கேட்டாலே இளசுகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அலறி ஓடுகிறார்களாம். 

    இது ஒருபுறம் இருக்க, தான் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் ஐந்தெழுத்து பெயர் கொண்ட முன்னணி நடிகை தான் நடிக்க வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டாராம் அந்த நடிகர். இதனால் அந்த படத்தின் இயக்குனர் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்து வருகிறாராம். இதனாலேயே அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம். 
    பிரபல நடிகை ஒருவர், நடிகரை தொந்தரவு செய்து மற்ற படங்களுக்கு சிபாரிசு செய்ய வலியுறுத்தி வருகிறாராம்.
    2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து கணவருடன் செட்டிலாகி இருந்தாராம். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

    நடிகையின் ஆர்வத்தை அறிந்து பலரும் வாய்ப்பு கொடுத்தார்களாம். ஆனால், அந்த படங்கள் எல்லாம் சரியாக ஓடவில்லையாம். இதனால், தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை தொடர்ந்து தொந்தரவு செய்து புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். மேலும் நடிகர் மூலமாக பல படங்களை பிடிக்க முயற்சி செய்து வருகிறாராம். நடிகரும் நடிகைக்காக பலரிடம் சிபாரிசு செய்து வருகிறாராம்.
    சினிமா உலகில் பட வாய்ப்பு இல்லாததால் விளம்பரத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகை தனது கணவரின் பட வாய்ப்புக்கு போராடி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் தன்னுடைய சிரிப்பால் பலருடைய உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இவர்தான் தற்போது இருக்கும் நிலையில் விளம்பர படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குபவராம்.

    இந்த நிலையில் நடிகை, தான் நடிக்கும் விளம்பர படங்களில் தன்னுடன் கணவரையும் நடிக்க வைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து வந்தாராம். ஆனால் பெரிதாக எடுபடவில்லையாம். இதனால், கணவரின் பட வாய்ப்புக்கு போராடி வருகிறாராம் நடிகை.
    இளம் நடிகர் ஒருவர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இயக்குனர் ஒருவரை தொந்தரவு செய்து வருகிறாராம்.
    குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நடிகராக வலம் வருபவர், சில ஆண்டுகள் பல சர்ச்சைகளில் சிக்கி படங்களில் நடிக்காமல் இருந்தாராம். பிறகு மனதை மாற்றிக் கொண்டு படங்களில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்த நிலையில், கொரோனா வந்து கெடுத்துவிட்டதாம்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் நடித்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். இதனால், முன்னணி இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க முடிவு செய்து அவரை தொந்தரவு செய்து வருகிறாராம் நடிகர்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஒருவர், தற்போது வில்லனாக நடிக்க இருக்கிறார்.
    சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களே அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், சமீபகாலமாக ஹீரோவை விட வில்லன்களுக்கே அதிக முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வருகிறது. இதையறிந்த பல ஹீரோக்கள் வில்லன் வேடத்தில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் ஹீரோவாக இருந்து தற்போது வில்லனாக மாறி இருப்பவர், தான் நடிக்க இருக்கும் படத்தின் ஹீரோவை விட அதிக சம்பளம் கேட்டு இருக்கிறாராம். படக்குழுவினரும் இதை ஏற்றுக் கொண்டு நடிகர் கேட்ட பணத்தை கொடுக்க ஒப்புக் கொண்டார்களாம்.
    சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகையின் படத்தை பல நடிகைகள் அபகரிக்க முயற்சி செய்கிறார்களாம்.
    சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்த நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். முன்னணி நடிகர்களின் படங்களை பிடிக்காமல், இரண்டாம் நிலையில் இருக்கும் நடிகர்களோடு நடிகை தற்போது நடித்து வருகிறாராம்.

    இதைப்பார்க்கும் மற்ற நடிகைகள், எப்படி பட வாய்ப்பை பிடிக்கிறார் என்று தெரியாமல் இருக்கிறார்களாம். நடிகைகள் வாய்ப்பு தேடும் இடங்களில் எல்லாம், சின்னத்திரை நடிகைக்கே முன்னுரிமை கொடுக்கிறார்களாம். இதனால் சில நடிகைகள் ஒன்று சேர்ந்து, நடிகையின் படங்களை அபகரிக்க முயற்சி செய்கிறார்களாம்.
    திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை ஒருவர், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
    குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்ற மூன்றெழுத்து நடிகை ஒருவர், திருமணத்துக்கு பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்திருக்கிறதாம். இதையறிந்த சில பட அதிபர்கள் அந்த நடிகையை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

    அப்போது அவர்களிடம், அந்த நடிகை சில நிபந்தனைகளை விதித்தாராம். ‘‘இனிமேலும் நான் கதாநாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன்...’’ என்பது தான் அந்த நிபந்தனைகளாம். அந்த நடிகையின் நிபந்தனைக்கு ஏற்றபடி கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்களாம்.
    தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் திறமையான நடிகை ஒருவர், பட வாய்ப்பை பிடிக்க சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
    திறமையான நடிகை என கோலிவுட்டில் பெயரெடுத்த நடிகை ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். தற்போது அவர் டோலிவுட்டில் பிசியாக இருந்தாலும், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லையாம்.

    இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க அவரை படக்குழுவினர் அணுகினார்களாம். முதலில் தயங்கியவர், பின்னர் நம்பர் நடிகையே இது போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பதால் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் சம்பளம் மட்டும் பெரிய தொகையாகக் கேட்டாராம்.

    படத்தின் பட்ஜெட்டே கம்மி தான் என்று படக்குழு சொல்லி, நடிகையிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டார்களாம். கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாத அந்த நடிகை, வேறு வழியின்றி குறைந்த சம்பளத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம்.
    தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அடுத்ததாக பெரிய நடிகருக்கு வலை வீசி இருக்கிறாராம்.
    தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தாராம். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

    இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். முன்னணி நடிகர், நடிகையை கவனிப்பாரா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.
    ×