என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
உலகக்கோப்பை போட்டிக்கு முன்னேறுவது ஸ்காட்லாந்தா? நெதர்லாந்தா?- ஜிம்பாப்வே வெளியேறியது
- ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது
- 8.5 ஓவர்கள் மீதம் இருந்ததும் விக்கெட் கைவசம் இல்லாததால் ஜிம்பாப்வே தோல்வி
உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்து தற்போது சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை அணி ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு 9-வது அணியாக தகுதி பெற்றநிலையில், கடைசி இடத்திற்கு ஜிம்பாப்வே, நெதர்லாந்து. ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் கடும்போட்டி நிலவியது.
நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டி செய்த ஸ்காட்லாந்து 234 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வேயின் நேர்த்தியான பந்து வீச்சால் ஸ்காட்லாந்து அணியால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை.
அந்த அணியின் மைக்கேல் லீஸ் அதிகபட்சமாக 34 பந்தில் 48 ரன்கள் அடித்தார். பிராண்டன் மெக்கல்லம் 34 ரன்களும், மேத்யூ கிராஸ் 38 ரன்களும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர், 235 சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது. ஷிகந்தர் ரசா (34), ரியான் பர்ல் (83), வெஸ்லி மாதேவேர் (40) வெற்றிக்காக போரடினர்.
என்றாலும் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்ததால் 41.1 ஓவரில் 203 சுருண்டது ஜிம்பாப்வே. இதன்காரணமாக 31 ரன்னில் தோல்வியை சந்தித்து இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதியாகும் வாய்ப்பை இழந்தது. ஸ்காட்லாந்து அணி சார்பில் கிறிஸ் சோலே 3 விக்கெட்டும், பிராண்டன் மெக்கல்லம் மற்றும் மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
நாளை நெதர்லாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டி தொடரில் விளையாட தகுதி பெறும்.
ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிக்ஸில் இன்று ஓமன்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. நாளை ஸ்காட்லாந்து- நெதர்லா்நது, அமெரிக்கா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
7-ந்தேதி இலங்கை- வெஸ்ட் அணிகள் விளையாடுகின்றன. 9-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கு தொடருக்கு 10 அணிகள் தகுதிப்பெற்றன. தலா ஐந்து அணிகளாக இரண்டு பிரிவுகளாக 10 அணிகளும் பிரிக்கப்பட்டன. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் சிக்ஸ் அணிக்கு தகுதிப் பெற்ற அணிகள் குரூப் பிரிவில் வெற்றி பெற்ற புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக 'பி' பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை குரூப் போட்டியில் இரு அணிகளையும் வீழ்த்தியிருந்ததால் நான்கு புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸில் விளையாடியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்