என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆசிய கோப்பை - 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
- முதலில் ஆடிய வங்காளதேசம் 127 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சார்ஜா:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தார். மொசாடெக் உசைன் 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஷஷாய் 23 ரன்னிலும், கேப்டன் முகமது நபி 8 ரன்னிலும் அவுட்டாகினர்.
இப்ராகிம் சட்ரான் நிதானமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சட்ரான் அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 43 ரன்கள் குவித்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருது முஜிபுர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.