என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆசிய கோப்பை கிரிக்கெட்: 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
- சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்.
- முதலில் விளையாடிய வங்காளதேசம் அணி 183 ரன்கள் குவித்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வங்காளதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
அந்த அணி வீரர் ஆசிப் உசைன் அதிகபட்சமாக 39 ரன்கள் விளாசினார். மெகிடி ஹசன் 38 ரன்கள், மஹ்முதுல்லா 27, சாகிப் அல் ஹசன் மற்றும் மொசாடெக் தலா 24 ரன்கள் அடித்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். நிசாங்கா20 ரன்கள் அடித்தார். கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் குவித்தார். கருணாரத்னே 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார்.
இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.