என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சு தேர்வு
- துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி முதலில் பந்து வீச முடிவு
- இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் ஹாங்காங் அணி பந்து வீசுவதற்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), பாபர் ஹயாத், யாசிம் முர்தாசா, கிஞ்சித் ஷா, ஸ்காட் மெக்கெக்னி (கீப்பர்), ஹாரூண் அர்ஷாத், அய்சாஸ் கான், ஜீஷன் அலி, எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்பர்.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது.