என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியாவா? ஆப்கானிஸ்தானா? பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் தேவை
- வங்காளதேசம் அணியால் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆனால் கைவசம் வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுகள் உள்ளது.
இந்த மழை காரணமாக அடிக்கடி நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு விளையாடி வருகிறது. மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.