search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டார்க் சாதனை
    X

    சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டார்க் சாதனை

    • 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • 121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.

    சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 28 ரன் கொடுத்து 6 விக்கெட் சாய்த்ததாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    651 விக்கெட்டுகள் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.

    ஸ்டார்க் 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாககும். டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×