search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது டி20-யிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
    X

    2-வது டி20-யிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 240 ரன்கள் குவித்தது.
    • 2-வதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட்டும் அதிரடியாக விளையாடினார். 14 பந்துகளை சந்தித்த அதில் 31 ரன்கள் குவித்தார்.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

    தொடக்க வீரர்களான கிங் 5 ரன்னிலும் சார்லஸ் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 18, ஹோப் 0, ருதர்வோர்ட் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய ரசல் - பவல் ஜோடி ரன் வேகத்தை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவல் அரை சதம் விளாசியும் ரசல் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

    Next Story
    ×