search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 425 ரன்கள் குவித்து டிக்ளேர்-  ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்கு
    X

    வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 425 ரன்கள் குவித்து டிக்ளேர்- ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்கு

    • முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் சுருண்டது.
    • ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷான்டோ 146 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் சுருண்டது. இதனை தொடர்ந்து 236 ரன்கள் முன்னிலையுடம் களமிறங்கிய வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் ஷான்டோ மற்றும் மோமினுல் சதத்தால் 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதல் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×