என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய சாண்டோ: 3-வது நாள் முடிவில் வங்காளதேசம் 212 ரன்கள் குவிப்பு
- வங்காளதேசம் அணியில் 2 வீரர்கள் ரன் அவுட் செய்யப்பட்டார்கள்.
- நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஷ் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது. முதலில் வங்களாதேசம் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 26 ரன்கள் முதல் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ- மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.
40 ரன்களில் மொமினுல் ஹக் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனையடுத்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.
Najmul Hossain Shanto became the first Bangladesh player to score a century on Test captaincy debut ?#BANvNZ #CricketTwitter pic.twitter.com/FMZKEf4DEd
— OneCricket (@OneCricketApp) November 30, 2023
நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஷ் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார். வங்காளதேசம் அணியில் 2 வீரர்கள் ரன் அவுட் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.