search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்: 137 இலக்கை எட்டுமா நியூசிலாந்து
    X

    2-வது இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்: 137 இலக்கை எட்டுமா நியூசிலாந்து

    • வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
    • நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளினர். இதனால் வங்காளதேசம் 172 ரன்னில் சுருண்டது. சான்ட்னெர், கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணிக்கும் அதே நிலைதான். 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஒரு கட்டத்தில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 72 பந்தில் 87 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 180 ரன்கள் எடுத்தது.

    8 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜகிர் ஹசன் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 144 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டும், சான்ட்னெர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வங்காளதேசம் மொத்தமாக 136 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 137 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதனால் போட்டி கடைசி ரன் வரை பரபரப்பாகவே செல்லும்.

    Next Story
    ×