search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    112 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோகித் படை
    X

    112 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோகித் படை

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதற்கடுத்த 3 போட்டிகளில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று 3- 1 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம் தேதி தரம்சாலாவில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து குல்தீப் யாதவ், அஸ்வின் சுழலில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, குல்தீப் 2, பும்ரா 1, ஜடேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    இதனால் 4- 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா வென்றது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 வருடங்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 - 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்றை இந்தியா படைத்துள்ளது.

    இதற்கு முன் உலக அளவில் 1897/98, 1901/02 ஆகிய வருடங்களில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் (2 முறை) 1911/12இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து மட்டுமே முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 - 1 (5) என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இந்த வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி படைத்துள்ளது.

    Next Story
    ×