search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விக்கெட் இழப்பின்றி சேசிங்: 4-வது இடம் பிடித்த இந்தியா- முதல் இடத்தில் பாகிஸ்தான்
    X

    விக்கெட் இழப்பின்றி சேசிங்: 4-வது இடம் பிடித்த இந்தியா- முதல் இடத்தில் பாகிஸ்தான்

    • விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    • இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது.

    ஹராரே:

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்தது.

    இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன் மூலம் இந்திய புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேசிங் செய்த அணி பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 200 ரன்களை சேசிங் செய்தது.

    விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமான 150-க்கும் மேற்பட்ட ரன் சேஸ்கள்

    பாகிஸ்தான் vs இங்கிலாந்து, கராச்சி, 2022 (இலக்கு: 200)

    நியூசிலாந்து vs பாகிஸ்தான், ஹாமில்டன், 2016 (இலக்கு: 169)

    இங்கிலாந்து vs இந்தியா, அடிலெய்டு, 2022 (இலக்கு: 169)

    இந்தியா vs ஜிம்பாப்வே, ஹராரே, 2024 (இலக்கு: 153)

    பாகிஸ்தான் vs இந்தியா, துபாய், 2021 (இலக்கு: 152)

    மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 150க்கு மேற்பட்ட இலக்கை எட்ட குறைந்தபட்ச பந்துகளை எடுத்துக்கொண்ட போட்டிகளின் பட்டியலில் இன்றைய போட்டி முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் இலக்கை 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டி இச்சாதனையை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 26 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சார்பில் அதிகபட்ச பார்ட்னஷிப்பை குவித்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இருவரும் இணைந்து 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இவர்கள் இருவரும் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே இதுநாள் வரை சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கொண்டு இந்திய அணிக்காக தொடக்க வீரர்கள் இணைந்து அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் வரிசையில் யஷஸ்வி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 165 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×