search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் தற்கொலை
    X

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் தற்கொலை

    • கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் தனது 52வது வயதில் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டேவிட் ஜான்சன், இன்று பெங்களூருவில் உள்ள அவரது அபார்ட்மெண்டிற்கு வெளியே இறந்து கிடந்துள்ளார்.

    டேவிட் ஜூட் ஜான்சன், கொத்தனூரில் உள்ள கனக ஸ்ரீ லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், டேவிட் ஜூன் ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னாள் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன். 1996- 97 சீசனில் இந்தியாவுக்காக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் டேவிட் ஜான்சன். ரஞ்சி டிராபியில் கேரளாவுக்கு எதிராக பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி புகழ் பெற்றார்.

    இதேபோல், உள்நாட்டு சுற்றுகளில் கர்நாடகாவுக்காக 70 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996-ல் அக்டோபரில் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். காயம்பட்ட ஜவகல் ஸ்ரீநாத்திற்கு பதிலாக அவர் அணியில் இடம்பிடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் டேவிட் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசினார் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஸ்லேட்டரை டக் அவுட் செய்தார்.

    அவர் அதே ஆண்டில் அடுத்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மற்றொரு டெஸ்டில் விளையாடினார். ஆனால் டர்பனில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.

    அவரது சர்வதேச வாழ்க்கை இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே நீடித்தது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்காக தொடர்ந்து விளையாடினார்.

    Next Story
    ×