search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டுவிட்டரே வேண்டாம், இன்ஸ்டாகிராம் போதும் - ரகசியம் பகிர்ந்த எம்.எஸ்.டோனி
    X

    'டுவிட்டரே வேண்டாம், இன்ஸ்டாகிராம் போதும்' - ரகசியம் பகிர்ந்த எம்.எஸ்.டோனி

    • டுவிட்டரில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை
    • எனக்கு இன்ஸ்டாகிராம் பிடித்துள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இதனையடுத்து சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், துபாய் ஐ யூடியூப் சேனலில் டோனி பேட்டி அளித்துள்ளார். அதில், "டுவிட்டரை விட இன்ஸ்டாகிராமை பயன்படுத்தவே நான் அதிகம் விரும்புவேன். டுவிட்டரில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடந்ததில்லை. இந்தியாவை பொறுத்தவரை டுவிட்டரில் எதாவது பதிவிட்டால் அதை பல வகையில் திரித்து சர்ச்சை ஆக்கிவிடுவார்கள். அதில் ஏன் நான் இருக்க வேண்டும்?

    எனக்கு இன்ஸ்டாகிராம் பிடித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஏதாவது வீடியோவை பதிவிட்டு, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×