என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட்
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அந்த அணியின் டக்கெட் 153 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ராஜ்கோட்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை எடுத்தது. பென் டக்கெட் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.