search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரோகித் அதிக அளவில் உணர்ச்சிவசப்பட்டதை 15 வருடத்தில் முதன்முறையாக கண்டேன்: விராட் கோலி
    X

    ரோகித் அதிக அளவில் உணர்ச்சிவசப்பட்டதை 15 வருடத்தில் முதன்முறையாக கண்டேன்: விராட் கோலி

    • நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார்.
    • பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

    பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து பேசினார். அப்போது 15 வருடங்களில் இதுபோன்ற ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    15 வருடங்களில் முதன்முறையாக ரோகித் சர்மா மிகவும் அதிகமான வகையில் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார். நானும் அழுது கொண்டிருந்தேன்.

    பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. வான்கடே மைதானம் சிறப்பு வாய்ந்தது. சிறு வயதாக இருக்கும்போதே இங்கு வந்துள்ளேன். இன்று (பாராட்டு விழா) என்ன பார்க்கிறனோ, அதை இதற்கு முன்னதாக பார்த்தது இல்லை. என்னுடைய மகனை பார்த்தபோது, நாம் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது பேச வார்த்தைவரவில்லை.

    சச்சின் தெண்டுல்கர் 21 வருடம் இந்திய அணியை வழி நடத்திச் சென்றார். அவரை நாங்கள் இதே மைதானத்தில் தோளில் தூக்கிச் சென்றோம். அவரை தூக்கிச் சென்றது நியாயமானது. நானும் ரோகித் சர்மாவும் அணியை வழி நடத்திச் சென்றோம். வான்கடேவுக்கு மீண்டும் கோப்பையை கொண்டு வந்ததைவிட சிறந்தது இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×