search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய வீரர் முதல் பயிற்சியாளர் வரை- கவுதம் கம்பீர் கடந்து வந்த பாதை
    X

    இந்திய வீரர் முதல் பயிற்சியாளர் வரை- கவுதம் கம்பீர் கடந்து வந்த பாதை

    • 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார்.
    • 2018-ம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக கம்பீர் அறிவித்தார்.

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லியை சேர்ந்தவர். இவர் 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து 2007-ம் ஆண்டில் டி20 என மூன்று வடிவ இந்திய அணியிலும் இடம் பிடித்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.

    கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமான நபர். அவர் கிரிக்கெட் ஆடிய காலங்களிலேயே ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது கம்ரான் அக்மல் மற்றும் அப்ரிடியிடம் மோதலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பான சம்பவம் அந்த நேரத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் போதும் சரி விளையாடி முடித்து தற்போது ஆலோசகராக இருக்கும் போது சரி, மோதலில் ஈடுபடுவதை தவிர்த்ததில்லை.

    குறிப்பாக விராட் கோலி - கம்பீர் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதை அனைவரும் பார்த்ததுண்டு. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி விளையாடும் போது விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் காம்பீர் கொண்டாடுவார். அப்போது விராட் கோலி அவரிடம் வார்த்தை மோதலில் ஈடுபடுவார்.

    அதேபோல் லக்னோ அணிக்கு ஆலோசகராக இருக்கும் போது விராட் லக்னோ வீரர்களிடம் வம்பிலுப்பார். இதனால் போட்டி முடிந்தவுடன் கம்பீர் இது தொடர்பாக விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபடுவார். இது ஐபிஎல் தொடரில் பரபரப்பாக பேசப்பட்டது.

    மேலும் டோனியுடன் இவர் நேருக்கு நேர் மோதுவதில்லை. ஆனால் அவ்வபோது பேட்டியில் டோனியை எதிர்த்து கருத்துக்களை தெரிவிப்பார். டோனியால் மட்டும் தான் உலகக் கோப்பை இந்தியா வாங்கியது என்று கூறி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கம்பீர் கூறி வருகிறார். இப்படி டோனியை எதிர்த்து பல கருத்துக்களை அவர் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இதை தவிர டோனிக்கு எதிராக களத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை சுற்றி 4 பீல்டர்களை அவர் சேட் செய்தார். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

    இப்படி எதையும் தயங்காமல் செய்யும் கம்பீர், வெற்றிக்காக தன் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நினைப்பவர்.

    2007-இல் நடந்த டி20 உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்தது கெளதம் கம்பீர் தான். 2011-இல், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக சாம்பியனான போதும், அப்போட்டியில் கம்பீரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. 2011 சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பையில் கம்பீர், 9 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 43.66 சராசரி மற்றும் 85.06 ஸ்டிரைக் ரேட்டில் 393 ரன்கள் எடுத்தார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும்.

    முதல் ஓவரில் இருந்து 42-வது ஓவர் வரை நின்று ஆடிய கம்பீர், 97 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், சிலர் இந்த வெற்றிக்கு கேப்டன் மகேந்திர சிங் டோனியை காரணம் காட்டியதும், கம்பீர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய இவரை கொல்கத்தா அணியின் கேப்டனாக அந்த அணியின் நிர்வாகம் நியமித்தது. கவுதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி முதன் முதலில் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு கொல்கத்தா இரண்டாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் ஆன போதும் கவுதம் தான் கேப்டனாக இருந்தார்.


    அதனை தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவரது ஆட்டமும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஒரு ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் விளையாடிய அவர் அதற்கு அடுத்த போட்டிகளில் இருந்து விலகினார்.

    இதனையடுத்து தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2018-ம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக கம்பீர் அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து விலகிய அவர் 2019 முதல் 2024 வரை 17-வது மக்களவை உறுப்பினராக இருந்தார். பிறகு அரசியலில் இருந்து முழுவதுமாக விலகி மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.

    அதன் பிறகு லக்னோ அணியின் ஆலோசராக செயல்பட்டார். 2022, 2023-ம் ஆண்டுகளில் லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கும் மூன்றாவது இடத்திற்கும் அழைத்துச் சென்ற பெருமை கம்பீரையே சேரும். இதனையடுத்து அந்த அணியின் பிரச்சனையின் காரணமாக மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கபட்டார்.


    இந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியனாகியுள்ளது. இந்த முறை கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்தார். மேலும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி மூன்று முறை பிளே-ஆஃப் சுற்றுகளை எட்டியது.


    2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×