search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    40 நிமிடம் பந்து வீச்சு பயிற்சி: Fire mode-ல் தயாராகும் ஹர்திக் பாண்ட்யா
    X

    40 நிமிடம் பந்து வீச்சு பயிற்சி: Fire mode-ல் தயாராகும் ஹர்திக் பாண்ட்யா

    • இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார்.
    • இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்க உளள்து.

    இந்த தொடரில் இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி நாளை சனிக்கிழமை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார். நடப்பு ஐ.பி.எல் சீசனில் அவரது ஆல்ரவுண்டர் திறம் பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்த நிலையில், அவரது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    ஹர்திக் கணிசமான நேரத்தை நெட்ஸில் பேட்டிங்கிற்கு செலவிட்டதாகவும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×