search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20-யில் என்னை தேர்வு செய்ய விரும்பினால் இப்போதே சொல்லுங்கள்: பிசிசிஐ-யிடம் ரோகித் தெரிவித்ததாக தகவல்
    X

    டி20-யில் என்னை தேர்வு செய்ய விரும்பினால் இப்போதே சொல்லுங்கள்: பிசிசிஐ-யிடம் ரோகித் தெரிவித்ததாக தகவல்

    • கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளில் சிலரும், சில தேர்வு குழுவினரும் ரோகித்சர்மா 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.
    • இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சமீபத்தில் ரோகித்சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை செய்தனர்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    கடந்த ஆண்டு இறுதியில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இருவரும் 20 ஓவரில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இருவரும் ஆடவில்லை.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30 வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

    அதே நேரத்தில் இளம் வீரர்களான சுப்மன் கில் ஜெய்ஷ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க் வாட், ரிங்குசிங் ஆகியோர் 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இதனால் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளில் சிலரும், சில தேர்வு குழுவினரும் ரோகித்சர்மா 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பையில் என்னை தேர்வு செய்ய விரும்பினால் இப்போதே சொல்லி விடுங்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழுவினரிடம் ரோகித்சர்மா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சமீபத்தில் ரோகித்சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் ஆலோசனை செய்தனர். அப்போது ரோகித் சர்மா லண்டனில் இருந்தார். இதனால் காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது ரோகித்சர்மா இதை தெரிவித்ததாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×