என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
அரைசதம் விளாசிய SKY- ஆப்கானிஸ்தானுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
- அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் அரை சதம் விளாசினார்.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பிரிஜ்டவுன்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிராஜ்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே தடுமாறினர். இதனால் ரோகித் வழக்கம் போல இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பரூக்கி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பண்ட் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
11 பந்தில் 20 ரன்கள் விளாசிய பண்ட், ரஷித் கான் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். உடனே எதிர்முனையில் இருந்த விராட் கோலி அவுட் என கூற அதற்கு பண்ட் பேட்டில் பட்டது என கூறிய ரிவ்யூ கேட்டார். ஆனால் பேட்டில் படாமல் சென்றது. இதனால் இந்தியாவுக்கு ஒரு ரிவ்யூ வீணானது.
அதனை தொடர்ந்து மிகவும் மந்தமாக விளையாடிய விராட் கோலி 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த துபே 10 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து சூர்யகுமார் மற்றும் பாண்ட்யா ஜோடி ஆப்கானிஸ்தான் பந்து சிறப்பாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.
குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் அரை சதம் விளாசினார். அடுத்த பந்தே அவரும் வெளியேறினார். 32 ரன்னில் இருந்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 7 ரன்னில் ஜடேஜாவும் நடையை கட்டினார்.
இறுதி ஓவரில் அக்சர் படேல் ஏதாவது செய்து அணியின் ஸ்கோரை உயர்த்துவாரா என எதிர்பார்த்த நிலையில் 2 பவுண்டரி விளாசி ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார். கடைசி ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்