search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது ஒருநாள் போட்டி - இந்தியா வெற்றிபெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே
    X

    விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாக்குர்

    2-வது ஒருநாள் போட்டி - இந்தியா வெற்றிபெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே

    • ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 13 வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.

    சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார். அவர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடி 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×