search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா, பாகிஸ்தானுக்கு முன்னுரிமை: ஐசிசி மீது இலங்கை மந்திரி குற்றச்சாட்டு
    X

    இந்தியா, பாகிஸ்தானுக்கு முன்னுரிமை: ஐசிசி மீது இலங்கை மந்திரி குற்றச்சாட்டு

    • இலங்கை குரூப் போட்டிகளில் விளையாட 4 இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
    • இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளில் ஒரே மைதானத்தில் விளையாடுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. டி20 தொடர் தொடங்கியதில் இருந்து மோசமான ஆடுகளம், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு வசதியான வகையில் போட்டி அட்டவணை, மோசமான வசதி என பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    இலங்கை அணிக்கு நியாயமான முறையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியதுதான் இதற்கு காரணம். குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாட இலங்கை அணி நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இது மட்டும் போதாத நிலையில், வங்காளதேச அணிக்கெதிராக விளையாட தல்லாஸ் செல்லும்போது ஏழு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    "இது தொடர்பாக ஐசிசி-க்கு புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியாக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஐசிசி-யிடம் கேட்டுள்ளோம்" என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒட்டல், தற்போது போட்டி நடத்தப்படும் இடத்திற்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடுகிறது என மற்ற அணிகள் குற்றம்சாட்டுகின்றன.

    Next Story
    ×