என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்- இந்தியாவுடன் நாளை மோதல்
- தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- சஞ்சு சாம்சனும் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
லாடர்ஹில்:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா கைப்பற்றியது.
இரு அணிகளும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. 3-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹிலில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும்.
ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் குவிக்க திணறி வருகிறார். அதேபோல் சஞ்சு சாம்சனும் ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சாகல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த உத்வேகத்துடன் இந்தியா களம் இறங்கும்.
ரோமன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் கில் பிரண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், ஹெட்மயர், மேயர்ஸ் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் மெக்காய், ஷெப் பர்ட், ஜோசன், ஹூசன் ஆகியோர் உள்ளனர்.
நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. ஆனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.