search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சூர்யகுமார் அரை சதத்தால் அமெரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
    X

    சூர்யகுமார் அரை சதத்தால் அமெரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

    • பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் அரைசதம் விளாசினார்.
    • அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.

    12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி 0 ரன்னிலும் ரோகித் 3 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் 18 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனால் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. இதனையடுத்து துபே - சூர்யகுமார் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 18.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்னிலும் துபே 31 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    Next Story
    ×