search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணியின் அனல் பறந்த பந்து வீச்சு- ஆஸ்திரேலியா 188 ரன்களுக்கு ஆல் அவுட்
    X

    இந்திய அணியின் அனல் பறந்த பந்து வீச்சு- ஆஸ்திரேலியா 188 ரன்களுக்கு ஆல் அவுட்

    • ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் 81 ரன்கள் குவித்தார்.
    • இந்திய தரப்பில் முகமது சமி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திராவிஷ் ஹேட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து மிட்சில் மார்ஷ் மற்றும் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 22 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் மிட்செல் மார்சும் 81 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.


    லெபுசென் 15, ஜோஷ் இங்கிலிஸ் 26, கீரின் 12 மேக்ஸ்வேல் 8, மார்கஸ் ஸ்டோனிஸ் 5, அபோர்ட் 0, ஜம்பா 0 என வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்திய தரப்பில் முகமது சமி, சிராஜ் தலா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும் குல்தீப், பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×