search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சென்னை மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த போவது யார்? லக்னோ- மும்பை இன்று பலப்பரீட்சை
    X

    சென்னை மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த போவது யார்? லக்னோ- மும்பை இன்று பலப்பரீட்சை

    • இரு அணிகளும் முதல் முறையாக சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது.
    • மும்பை இந்தியன்ஸ் இதுவரை ஒருமுறை கூட லக்னோ அணியிடம் வென்றதில்லை.

    சென்னை:

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் இரு அணிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறித்து காணலாம்.

    மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறியுள்ளது. மும்பை அணிக்கு பேட்டிங் மட்டுமே பக்கபலமாக இருக்கிறது. பந்து வீச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு வர முக்கிய காரணமாக குஜராத் - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டம் ஆகும். அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியதால்தான் மும்பை இந்தியன்ஸ் கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. கடந்த சீசனில் அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் பெங்களூருவிடம் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. இம்முறை வலுவான பந்து வீச்சு தாக்குதல், மிடில் ஆர்டர் பேட்டிங்கை லக்னோ அணி கொண்டுள்ளது.

    குயிண்டன் டி காக், பிரேரக் மன்கட், குர்ணால் பாண்ட்யா, ஸ்டாயினிஸ், பதோனி, நிகோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், மோஹ்சின் கான், அவேஷ்கான், நவீன் உல்ஹக், அமித் மிஷ்ரா, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருடன் குர்ணால் பாண்ட்யாவும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

    இரு அணிகளும் முதல் முறையாக சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மெதுவான பிட்ச் என்பதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியில் பியூஸ் சாவ்லாவை தவிர எந்த அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளரும் இல்லாதது மும்பை அணிக்கு பாதகமாக அமையும்.

    அதேபோல லக்னோ அணியில் அமித் மிஸ்ரா, குர்ணால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய் ஆகிய அனுபமிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் சென்னை மைதானத்தில் அவர்களின் தாக்கம் மும்பை அணிக்கு பாதகமாக அமையும்.

    மும்பை அணி இந்த சீசனில் பவர் ஹிட்டர்களையே நம்பி உள்ளது. கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் லக்னோ அணியின் பந்து வீச்சு துறைக்கு சவால் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. கடந்த சீசனில் இரு முறையும் தற்போது ஒரு முறையும் லீக் சுற்றில் மும்பை மண்ணில் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி கண்டுள்ளது. இருப்பினும் இரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

    Next Story
    ×