search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அஸ்வினை துவக்க வீரராக களமிறக்கியதற்கு என்ன காரணம்- சஞ்சு சாம்சன் விளக்கம்
    X

    அஸ்வினை துவக்க வீரராக களமிறக்கியதற்கு என்ன காரணம்- சஞ்சு சாம்சன் விளக்கம்

    • ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக பட்லர் களமிறங்காமல் தமிழக வீரர் அஸ்வின் இறங்கினார்.
    • ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக பட்லர் களமிறங்காமல் தமிழக வீரர் அஸ்வின் இறங்கியது குறித்து சாம்சன் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில்:-

    பட்லர் பீல்டிங் செய்யும்போது கையில் காயம் அடைந்தார். அதன் காரணமாக அவருக்கு தையல்கள் போட நேரம் ஆகும் என்பதனால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்கிற காரணத்தினாலேயே அஸ்வினை நாங்கள் துவக்க வீரராக அனுப்பினோம். அதற்குள் ஜாஸ் பட்லரும் தனது சிகிச்சை முடித்துக் கொண்டார்.

    பின்னர் அஸ்வின் ஆட்டம் இழந்ததும் மூன்றாவது வீரராக பட்லர் களம் புகுந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயமடைந்த ஜாஸ் பட்லரும் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×