search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐ.பி.எல். 2024 : ரஹானே போராட்டம் வீண் - முதல் வெற்றி பெற்றது டெல்லி
    X

    ஐ.பி.எல். 2024 : ரஹானே போராட்டம் வீண் - முதல் வெற்றி பெற்றது டெல்லி

    • சென்னை அணியின் ரஹானே 45 ரன்களை குவித்தார்.
    • முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. இதையடுத்து 192 ரன்களை இலக்காக துரத்திய சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.


    சென்னை அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் முறையே 45 மற்றும் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ். டோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். இந்த ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.


    போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ரன்களுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.

    Next Story
    ×