search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மழையால் ஆட்டம் பாதிப்பு- டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து
    X

    மழையால் ஆட்டம் பாதிப்பு- டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து

    • அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.
    • இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது.

    மெல்போர்ன்:

    மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின

    மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்ட பிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

    இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது.

    2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.

    மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. கேப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

    அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 158 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பால்பிரீன் அதிகபட்சமாக 47 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), டக்கர் 27 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

    இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், சாம்கரண் 2 விக்கெட்டும் பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டம் கைப்பற்றினர்.

    158 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து ஆடியது. கேப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் 7, பென் ஸ்டோக்ஸ் 6, ப்ரோக் 18, மலான் 35 ரன்னில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து மொய்ன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். மொய்ன் அலி அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×