search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அது ஐசிசி தலைவலி: இந்தியாவுக்கு சாதகமான அட்டவணை குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா நறுக் பதில்
    X

    அது ஐசிசி தலைவலி: இந்தியாவுக்கு சாதகமான அட்டவணை குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா நறுக் பதில்

    • வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
    • மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 56 ரன்னில் சுருண்டது.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது.

    இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய கேப்டன்

    ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்நிலையில், மழையை நினைத்து மட்டுமே கவலைப்படுகிறேன் என ரோகித் சர்மா கூறினார். இதுதொடர்பாக ரோகித் சர்மா பேசியதாவது :

    மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.

    ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனது ஒரே கவலையாகும்.

    ஆனாலும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டியது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மற்றும் ஐசிசியின் பொறுப்பு.

    தற்போதைக்கு இப்போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.

    கயானாவில் விளையாடுகிறோம் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை.

    இதுபோன்ற வெவ்வேறு மைதானங்களில் நிறைய வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடி இருப்பார்கள் என்று உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது.

    வெற்றி பெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×