search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலகக்கோப்பை வரலாற்றில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் கிங் கோலி
    X

    உலகக்கோப்பை வரலாற்றில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் 'கிங்' கோலி

    • டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1,207 ரன்கள் குவித்துள்ளார்.
    • 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    நேற்று இரவு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் விராட் கோலி 37 ரன்கள் அடித்தார்.

    இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். இதில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக்கோப்பைகளும் அடங்கும்.

    டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடி 129.78 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 63.52 என்ற பிரமிக்க வைக்கும் சராசரியுடன் 1,207 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. இதில் 14 அரைசதங்களும் அடங்கும்.

    2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி 2-ம் இடத்தில் உள்ளார். 37 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1795 ரன்கள் அடித்துள்ளார்.

    2023 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×