என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இப்படியும் கேட்ச் பிடிக்கலாமா? களத்தில் கலக்கிய மைக்கேல் நெசர் - வைரலாகும் வீடியோ
- முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224/5 ரன்கள் குவித்து மிரட்டியது.
- 225 ரன்களை துரத்திய சிட்னி 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் பிரீமியர் லீக் டி20 தொடர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்தொடரில் 2023 புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியன்று நடைபெற்ற 25 வது லீக் போட்டியில் பிரிஸ்பென் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.
காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224/5 ரன்கள் குவித்து மிரட்டியது.
அதை தொடர்ந்து 225 ரன்களை துரத்திய சிட்னி 20 ஓவர்களில் 209 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
முன்னதாக அப்போட்டியில் மிடில் ஓவர்களில் களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்த ஜோஸ் சில்க் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக ரன்களை சேர்த்து சிட்னி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வர போராடினார். குறிப்பாக 19-வது ஓவரின் முதல் பந்தில் அதிரடி காட்டிய அவர் டீப் திசையில் சிக்சரை பறக்க விட்டார். அதை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் நாசீர் முடிந்தளவுக்கு தாவி பந்தை பிடித்தார். அதே சமயம் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரி எல்லையை கடந்த அவர் வழக்கம் போல பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்றார்.
Let's keep aside the ruling for a bit and appreciate how incredibly aware Michael Neser is of the law here.?? #Unreal https://t.co/rTxnYi1hrE
— Shikha Pandey (@shikhashauny) January 2, 2023
ஆச்சரியப்படும் வகையில் அவர் வீசிய கோணத்தில் மைதானத்திற்குள் செல்லாத பந்து தொடர்ந்து அவரை நோக்கியே பவுண்டரி எல்லைக்குள் காற்றில் இருந்தது. அப்போது பவுண்டரிக்குள் சென்று 3- 4 அடிகள் மெதுவாக ஓடிய அவர் தன்னை நோக்கி வந்த பந்து கச்சிதமாக பிடிக்க முயற்சிதார். ஆனால் பவுண்டரிக்குள் இருந்த அவர் தனது கையால் கீழே வந்து கொண்டிருந்த பந்தை பிடிக்க சென்ற போது ஒரு காலில் தாவி இன்னொரு காலையும் தரையிலிருந்து எடுத்த பின்னர் பந்தை பிடித்து அடுத்த அரை நொடிக்குள் மீண்டும் மைதானத்திற்குள் இருக்கும் வகையில் காற்றில் தூக்கி போட்டார். அதாவது பந்தை பிடிக்கும்போது அவரது இரு கால்களும் அரை நொடிப் பொழுது காற்றில் இருந்தது. அதனால் மீண்டும் களத்திற்குள் வந்து பந்தை பிடித்த அவர் கேட்ச் பிடித்து விட்டதாக நடுவரிடம் வாதாடினார்.
அதை தொடர்ந்து அதை சோதித்த 3-வது நடுவர் அழைத்த நிலையில் ஒன்றுக்கு 2 முறை அவரது இந்த சாதுரியமான வேலையை சோதித்து பார்த்தார். இறுதியில் பவுண்டரிக்குள் சென்றாலும் பந்தை அவர் கையில் பிடிக்கும் போது 2 கால்களும் தரையில் இல்லாத காரணத்தால் அது அவுட் என்று நடுவர் அறிவித்தார்.
அதனால் வர்ணையாளர்கள் மிகவும் ஆச்சரியமடைந்து வியப்பில் ஆழ்ந்தது போலவே ரசிகர்களும் வாய் மேல் கை வைத்து நின்றார்கள். மேலும் இது நான் பார்த்ததிலேயே மிகவும் சர்ச்சையான அவுட் என்று வர்ணனையாளர்கள் செய்த ஆடம் கில்கிறிஸ்ட், சைமன் டௌல் ஆகியோர் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்