search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒரு ஆண்டில் அதிக சிக்சர்: டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்த ரோகித்
    X

    ஒரு ஆண்டில் அதிக சிக்சர்: டிவில்லியர்ஸ் சாதனையை முறியடித்த ரோகித்

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 61 ரன் எடுத்தார்.
    • கேப்டன் பதவியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையும் ரோகித்சர்மா படைத்தார்.

    உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 61 ரன் எடுத்தார். அவர் 2 சிக்சர்கள் அடித்தார்.

    இதன்மூலம் ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்தார். ஒரே ஆண்டில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். ரோகித்சர்மா 25 ஆட்டத்தில் 60 சிச்ர்கள் அடித்துள்ளார். அவர் டிவில்லியர்ஸ் (தென்ஆப்பி ரிக்கா) சாதனையை முறி யடித்தார்.

    டிவில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு 58 சிக்சர்கள் (18 இன்னிங்ஸ்) அடித்து இருந்தார். கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 56 சிக்சர்களும் (2019), அப்ரிடி (பாகிஸ்தான்) 48 சிக்சர்களும் (2002) அடித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    கேப்டன் பதவியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையும் ரோகித்சர்மா படைத்தார். அவர் 24 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இதன்மூலம் மார்கனை முந்தினார். இங்கிலாந்து கேப்டனாக பணியாற்றிய அவர் 2019 உலகக் கோப்பையில் 22 சிக்சர்கள் அடித்து இருந்தார்.

    மேலும் ரோகித்சர்மா சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரர் வரிசையில் 14 ஆயிரம் ரன்னை கடந்தும் சாதனை படைத்தார்.

    Next Story
    ×