search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் டோனியின் சாதனைகள்
    X

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் டோனியின் சாதனைகள்

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.
    • டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய டோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் டோனி பல சாதனைகளை படைத்துள்ளார். முதலாவதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டோனி 9 முறையும் ரோகித் 8 முறையும் ரிஷப் பண்ட் 6 முறையும் அடித்துள்ளனர்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதை தவிர ஐபிஎல் தொடரில் 19 மற்றும் 20-வது ஓவர்களில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் விரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 57 சிக்சர்களுடன் பொல்லார்ட் 2-வது இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×