search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மும்பை இந்தியன்ஸ்க்கு கடைசி இடம்: ரன்னில் ரோகித் சர்மா- விக்கெட்டில் பும்ரா
    X

    மும்பை இந்தியன்ஸ்க்கு கடைசி இடம்: ரன்னில் ரோகித் சர்மா- விக்கெட்டில் பும்ரா

    • ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் அடித்துள்ளார்.
    • பும்ரா 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வருட ஐபிஎல் சீசன் சிறப்பாக அமையவில்லை. 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ், அதற்கு பின் தொடரந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. என்றபோதிலும் அதன் உத்வேகத்தை தொடர்ந்து எடுத்துச்செல்ல முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன் பதவிதான். அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதால் அணியில் இரு பிரிவு உண்டானதாக கூறப்பட்டது.

    மேலும் ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. ஒட்டுமொத்தமாக கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

    ரோகித் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 417 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இவரது ஸ்கோரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும்.

    திலக் வர்மா 13 போட்டிகளில் விளையாடி 416 ரன்கள் அடித்துள்ளார். இவரது ஸ்கோரில் 3 அரைசதம் அடங்கும். சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் விளையாடி 345 ரன்கள் அடித்துள்ளார். இஷான் கிஷன் 320 ரன்களும், டிம் டேவிட் 241 ரன்களும் சேர்த்தனர்.

    பந்து வீச்சில் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த சீசனில் இதுவரை பஞ்சாப் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் 13 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    சாவ்லா மற்றும் கோயேட்சே தலா 13 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 11 விக்கெட்டுகளும், நுவான் துஷாரா 8 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் கடந்த முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 2022-ல் கடைசி இடத்தை பிடித்தது. 2021-ல் ஐந்தாவது இடத்தையும், 2020-ல் முதல் இடத்தையும், 2019-ல் முதல் இடத்தையும், 2018-ல் ஐந்தாவது இடத்தையும், 2017-ல் முதல் இடத்தையும், 2015-ல் 2-வது இடத்தையும், 2014-ல் ஐந்தாவது இடத்தையும், 2013-ல் 2-வது இடத்தையும், 2012-ல் 3-வது இடத்தையும், 2011-ல் 3-வது இடத்தையும், 2010-ல் முதல் இடத்தையும், 2009-ல் 7-வது இடத்தையும், 2008-ல் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருந்தது.

    Next Story
    ×