என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
4-ம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பு- நியூசிலாந்தை மிரட்டிய வங்காளதேசம்
- 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
- வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சில்ஹெட்:
நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து வில்லியம்சனின் சதம் மூலம் 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 338 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாண்டோ 105 ரன், ரஹீம் 67 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டாம் லாதம் 0 ரன், கான்வே 22 ரன் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
What a day for Bangladesh! The Tigers on the cusp of a famous win after bagging 7 wickets today ?
— FanCode (@FanCode) December 1, 2023
.
.#BANvNZ pic.twitter.com/TYjKtroOdf
இதையடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் 11, நிக்கோல்ஸ் 2, டாம் ப்ளண்டெல் 6, பிளிப்ஸ் 12, ஜெமிசன் 9 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. மிட்செல் 44 ரன்களிலும் சோதி 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.