search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வங்காளதேசம் அசத்தல் பந்து வீச்சு: 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து
    X

    வங்காளதேசம் அசத்தல் பந்து வீச்சு: 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார்.
    • வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்களாதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. ஷோரிஃபுல் இஸ்லாம் 13 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே சவுத்தி விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் வங்களாதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடங்க வீரர்களாக லாதம் - கான்வே களமிறங்கினர். தொடங்கத்திலேயே அதிரடி காட்டிய லாதம் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கான்வே 12 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த நிக்கோலஸ் 19 ரன்னில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 98 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதனையடுத்து வில்லியம்சன் - மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 41 ரன்கள் இருந்த போது மிட்செல் ஸ்டெம்பிங் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த டாம் ப்ளண்டெல் 6 என அவுட் ஆனார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் 42 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்தது. ஜெமிசன் 7 ரன்னிலும் சவுத்தி 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Next Story
    ×