என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இஷான் கிஷன்- ஷ்ரேயாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை? - டிராவிட் பதில்
- இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை.
- ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கான் ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டனர். குறிப்பாக கடைசியாக நடைபெற்ற தென்னாபிரிக்க தொடரில் இடம் பிடித்திருந்த இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்கள் இந்த தொடரில் சம்பந்தமின்றி நீக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதாக சொல்லிவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவர்கள் மீது நன்னடத்தை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் மீது நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நன்னடத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. இஷான் கிசான் இத்தொடரின் தேர்வுக்கான பட்டியலில் இல்லை. தென்னாப்பிரிக்க தொடரில் இடைவெளி கேட்ட அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். எனவே தற்போது அவர் விளையாடுவதற்கு தயாராக இல்லை.
இடைவெளி முடிந்ததும் அவர் உள்ளூர் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவார். அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே இதன் பின்னணியில் சுமாரான நன்னடத்தை உட்பட எந்த காரணமும் இல்லை.
இவ்வாறு டிராவிட் கூறினார்.