search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆல்-டைம் பிளேயிங் லெவன்: யுவராஜ் தேர்வு செய்த அணியில் டோனிக்கு இடமில்லை
    X

    ஆல்-டைம் பிளேயிங் லெவன்: யுவராஜ் தேர்வு செய்த அணியில் டோனிக்கு இடமில்லை

    • இந்த அணியில் மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
    • யுவராஜ் சிங்கிடம் மோதிய இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் பெயர் கூட இந்த லெவனில் உள்ளது.

    மும்பை:

    சமீபத்தில் உலக லெஜன்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. அப்போது உலக அளவில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யுமாறு யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டிருந்தது.

    அதற்கு மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே கொண்ட உலக அளவில் 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்தார். அந்த மூன்று இந்திய வீரர்களில் டோனியின் பெயர் இடம் பெறவில்லை.

    யுவராஜ் சிங் தேர்வு செய்த அணி உலக கிரிக்கெட் லெவன்- சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ரிக்கி பாண்டிங், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஆண்ட்ரூ பிளின்டாஃப், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் க்ளென் மெக்ராத்.

    2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கிடம் மோதிய இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாஃப் பெயர் கூட இந்த லெவனில் உள்ளது. ஆனால் தனது சக வீரரான டோனியை அவர் இந்த அணியில் தேர்வு செய்யவில்லை.

    2007-ல் டோனி கேப்டன் பதவியை பெற்றதில் யுவராஜ் சிங்கிற்கு அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாகவே, அவர் டோனியின் பெயரை தவிர்த்து இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    Next Story
    ×