search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடியை தொடர்ந்து முகமது வாசிமும் ஆசிய கோப்பையில் இருந்து விலகல்
    X

    முகமது வாசிம்

    பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடியை தொடர்ந்து முகமது வாசிமும் ஆசிய கோப்பையில் இருந்து விலகல்

    • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.
    • பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 7 டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.

    துபாய்:

    இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

    முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

    இதற்கிடையே, ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான முகமது வாசிம் முதுகுவலி காரணமாக துபாயில் பயிற்சியிலிருந்து வெளியேறினார். முகமது வாசிமுக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 7 டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.

    Next Story
    ×