search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஜூனியர் ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
    X

    ஜூனியர் ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

    • முதலில் விளையாடிய நேபாளம் அணி 47.2 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் தரப்பில் முகமது ஜீஷான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    துபாய்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.

    தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி, நசீர் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆட்டமும் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

    பாகிஸ்தான் - நேபாளம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நேபாளம் அணி 47.2 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக உத்தம் மகர் 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஜீஷான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அசான் அவாய்ஸ் 56 ரன்கள் எடுத்தார். நேபாளம் தரப்பில் குல்சன் ஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×